ulagam

கழுகும் காகமும்



jal-kids-home animal kathai-home

கழுகும் காகமும் :

உயரமான மலை முகட்டின் மீது கழுகு ஒன்று கூடுகட்டி வாழ்ந்து வந்தது. மலையின் அடிவாரத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் கழுகு தன் கூட்டிலிருந்து கீழ் நோக்கிப்பாய்ந்து பறந்து வந்தது.ஒரு சிறிய ஆட்டுக் குட்டியைக் கொத்திச் சென்றது. மேலே மறுபடியும் பறந்தது. தன் கூட்டிற்கு திரும்பியது.

கழுகு ஒரே பாய்ச்சலில் பறந்து செய்த இந்த அதிசயச் செயலை காகம் பார்த்தது.“கழுகால் இச் செயலை செய்ய முடியும் என்றால் என்னால் ஏன் செய்ய முடியாது?” என்று காகம் யோசித்தது.

ஒரு நாள் காகம் தன்னால் முடிந்த அளவிற்கு மேலே உயரஉயர பறந்தது.பிறகு அதிக வேகமாகப்பாய்ச்சலுடன் கீழே பறந்து வந்தது.பாவம் !அதற்கு ஆடு ஒன்றும் கிடைக்கவில்லை: தரையில் மோதி கீழே விழுந்தது. அதன் அலகும் தலையும் நொறுங்கி காகம் உயிர் இழந்தது.

தன் வலிமை உணர்ந்து செயற்படு.





சிறுவர் கதைகள்