ulagam

முட்டாள் சிங்கம்



jal-kids-home animal kathai-home

முட்டாள் சிங்கம் :

ஒரு சிங்கத்திற்கு ஒரு நாள் பசி எடுத்தது. பசியாறிட தன் குகையிலிருந்து விலங்குகளை தேடி வெளியில் வந்தது. வழியில் ஒரு முயலைப் பார்த்தது. முயல் ஒரு மரத்தின் கீழ் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. சிங்கம் முயலின் பக்கம் நடக்கத் தொடங்கியது. சிங்கத்தைக் கண்டு நடுங்கிய முயல் பயத்துடன் ஓடியது. சிங்கம் முயலைத் துரத்தியது. விரைவில், சிங்கம் முயலைப் பிடித்துவிட்டது.

முயலை அடித்துக் கொல்ல கையை ஓங்கிய சிங்கம் ஒரு மானைக் கண்டது. “இந்த சின்ன முயல் தன் பசிக்குப் போதாது”என்று எண்ணி முயலை விட்டுவிட்டு ,மானைத் துரத்தியது. மான் மிகவும் விரைவாக ஓடியது. சிங்கத்தால் துள்ளி ஓடும் மானைப் பிடிக்க முடியுமா என்ன? நெடுந் தூரத்திற்கு பிறகு சிங்கம் களைப் படைந்தது. துரத்துவதை நிறுத்தி விட்டது. கைக்கு எட்டிய முயலை விட்டேன் என மனம் வருந்தியது.

பேராசை பெருநஷ்டம்





சிறுவர் கதைகள்