ulagam

மாடுகளும் புலியும்



jal-kids-home animal kathai-home

யோசிக்காமல் வேலை செய்யாதே :

முன்னொரு காலத்தில் ,நான்கு பசுமாடுகள் ஒரு காட்டில் வாழ்ந்து வந்தன. அவை நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எப்போதும் ஒற்றுமையாக அமைதியுடன் வாழ்ந்தன. கொடிய விலங்குகள் தாக்கினால், நான்கு மாடுகளும் ஒன்று சேர்ந்து தாக்க வந்த எதிரியுடன் சண்டையிட்டு அவற்றை விரட்டி தம்மை காத்துக் கொண்டன.

ஒரு புலிக்கு இம்மாடுகள் மீது ஒரு கண். மாடுகள் ஒற்றுமையாக இணைந்திருந்ததால் தாக்க புலிக்கு தைரியம் வரவில்லை.

ஒரு நாள் மாடுகள் நான்கும் சண்டையிட்டுக் கொண்டன. பிரிந்து தனித்தனியே சென்றன. வெகுநாட்களாகக் காத்திருந்த புலிக்கு, இப்போது ஒரு அரியவாய்ப்பு. புலி ஒவ்வொரு மாடாக அடித்துக் கொன்றுதின்று விட்டது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு





சிறுவர் கதைகள்