ulagam

நாய் கற்ற பாடம்



jal-kids-home animal kathai-home

நாய் கற்ற பாடம் :

மாட்டு மந்தை ஒன்று, ஒரு நாள் தொழுவத்தில் வைக்கோல் தின்பதற்காக வந்தது. வைக்கோல் போரின் மேல் ஒரு நாய் படுத்திருந்தது. மாடுகளைக் கண்ட நாய், பலமாக குரைத்தது பயமுறுத்தி மாடுகளை விரட்டி விட்டது.

அவற்றில் ஒரு மாடு “தயவுசெய்து எங்களை வைக்கோலை தின்னவிடு .அதுதானே எங்களுக்கு உணவு. பசி வேறு அதிகமாக உள்ளது.” என்று கெஞ்சிக் கேட்டது .நாய் மாட்டைப் பார்த்து வேகமாக குரைக்கவும் மாடு பயந்து திரும்பிச் சென்றது.

பிறகு, வேறொரு மாடு சென்றது ஒரு காளை மாட்டை அழைத்து வந்தது. அந்த காளை மாடு; “நாயே !
நீயோ வைக்கோலை திங்க முடியாது. இது தானே எங்களுக்கு உணவு. ஆகவே நீ இங்கிருந்து போய்விடு”எனக் கேட்டுக் கொண்டது.

காளையின் பணிவான சொற்கள் நாய் காதில் விழுந்தால் தானே! இதனால் கோபமுற்ற காளை சீற்றத்துடன் நாயை முட்டுவதற்கு தயாரானது. உடனே நாய் பாய்ந்து வேகமாக ஓட்டம்பிடித்தது.

அயலார் உடைமையில் அந்த கண் போல் இரு





சிறுவர் கதைகள்