ulagam

வால் அறுந்த குரங்கு



jal-kids-home animal kathai-home

வால் அறுந்த குரங்கு :

தச்சன் ஒருவன் ஒருநாள் ஒருபெரிய மரக்கட்டையை இருதூண்டுகளாக்க ரம்பத்தால் அறுத்துக் கொண்டிருந்தான். மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, இதைப் பார்த்துக் கொண்டிருந்தது. மதிய உணவு சாப்பிடத் தச்சன் தன் வேலையை நிறுத்தினான். இதுவரை அவன் மரக்கட்டையில் ஒரு பகுதியை மட்டுமே அறுத்திருந்தான். பிளவு செய்த இடத்தில் சிறுகட்டை ஒன்றை சொருகிவிட்டு சாப்பிடச் சென்றான்.

தச்சன் சென்ற பிறகு குரங்கு மரத்திலிருந்து கீழே குதித்தது. மரக்கட்டையை சுற்றிச் சுற்றி வந்து கவனத்துடன் பார்த்தது. சொருகிஇருந்த சிறுகட்டையை ஆவலுடன் பார்த்தது! ஆவல் அதிகமாக தன் இருகால்களையும் விரித்து மரக்கட்டையின் மேல் ஏறி அமர்ந்தது. அப்போது அதன் நீண்ட வால் ,அகலமாக வெட்டிப் பிளந்து இருந்த மரக்கட்டைக்கு நடுவில் தொங்கிக் கொண்டிருந்தது. சும்மா இராமல் குரங்கு சிறியகட்டையை கையால் ஆட்டிப் பார்த்தது. தீடீரென்று பிடிங்கியும் விட்டது. உடனே அறுந்திருந்த இருபாகங்களும் தீடீரென்று ஒன்று சேர்ந்துவிட்டன. குரங்கின் வால் பிளவின் நடுவே மாட்டிக்கொண்டது. அது வலியால் துடித்தது, உரக்க சத்தமிட்டுக் கொண்டே வெளியே எகிறிக் குதித்தது. அதன் வால் அறுந்து போய் விட்டது.

சிந்தித்து செயல்படு. அளவுக்கு மீறிய ஆவல் ஆபத்தில் முடியும்.





சிறுவர் கதைகள்